மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹார் பகுதியில், பொலிரோ கார் மீது பைக்கில் வந்த நபர் மோதிய பரபரப்பான CCTV காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கார் சாலையை கடக்க முயன்ற போது, எதிர்பாராதவிதமாக மின்னல் வேகத்தில் வந்த பைக் கார் மீது மோதி வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் காரில் இருந்த இருவர், மற்றும் பைக்கில் வந்த நபர் என 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதிவேகமே இந்த விபத்திற்கு முக்கிய காரணமாகும்.