சேலம் பெருங்கோட்ட பா.ஜனதா மாநாடு வருகிற 19-ந் தேதி ஓமலூர் பைபாஸில் உள்ள திருமண மண்டபத்தில் நடக்கிறது. இந்த மாநாட்டில் சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 5 வருவாய் மாவட்டங்கள், கட்சியின் அமைப்பு ரீதியான 9 மாவட்ட நிர்வாகிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். இதில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் தேசிய தலைவர்கள், மந்திரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மாநாட்டுக்கான கால்கோன் விழா நேற்று நடந்தது. தொடர்ந்து சேலம் பெருங்கோட்ட பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் ஹரிராமன் வரவேற்றார்.
கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன், கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன், நாமக்கல் மேற்கு, கிழக்கு மாவட்ட தலைவர்கள் ராஜேஷ்குமார், சரவணன். தர்மபுரி மாவட்ட தலைவர் சரவணன், கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தலைவர் கவின் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் பெருங்கோட்ட தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார். இதில் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் அண்ணாதுரை, முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஓமலூர் தொகுதி பொறுப்பாளர் ரவி நன்றி கூறினார்.