சேலம்: விமான நிலையம் விரிவாக்க பணி; அளவீடு செய்தவரகளிடம் வாக்குவாதம்

85பார்த்தது
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் சுமார் 160 ஏக்கர் பரப்பில் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையம் 570 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யும் பணிக்காக நிலம் அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது. 

இந்த நிலையில் நேற்று (நவம்பர் 20) சிக்கனம்பட்டி கிராமத்தில் விரிவாக்க பணிக்காக நிலம் எடுக்கப்படும் விவசாய நிலத்தில் உள்ள மரங்கள், வீடுகள் கணக்கிடும் பணியில் போலீஸ் பாதுகாப்புடன் விமான நிலைய விரிவாக்க தாசில்தார் பொன்னுசாமி காந்தி தேசாய் மற்றும் வருவாய் துறையினர் ஈடுபட்டனர். 

அங்கு வந்த கிராம மக்கள் நிலம் அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து வருவாய்த்துறையினர் நிலம் அளவீடு செய்யாமல் புறப்பட்டு சென்றனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி