ஓமலூர் பேரூராட்சிப் பகுதிகளில் ஏற்கனவே அனைத்து வார்டுகளிலும் உள்ள மின் கம்பங்களில் மஞ்சள் நிற மெர்குரி தெரு விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மின்சார சேமிப்பை கருத்தில் கொண்டு பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்களில் உள்ள பழைய மெர்குரி மின்விளக்கை அகற்றிவிட்டு புதிய எல்இடி தெருவிளக்குகள் பொருத்தும் பணி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெற்று வருகிறது.
இதில் 20 வாட்ஸ் அளவு கொண்ட மின்விளக்குகள் 208 எல்இடி தெருவிளக்குகளும் மற்றும்
120 வாட்ஸ் அளவு கொண்ட 214 எல்இடி தெருவிளக்குகள் என மொத்தம் 422 எல்இடி மின்விளக்குகளை நகரின் பல்வேறு பகுதிகளில் பொருத்தும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் மின்பணியாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.