சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு கடந்த 10 நாட்களாக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்தது. நேற்று(செப்.18) நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 367 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து பாசன தேவைக்காக வினாடிக்கு 23 ஆயிரத்து 700 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவைவிட அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைந்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 108.85 அடியாக இருந்தது.