சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையின் அருகே கள்ள சந்தையில் மது விற்பனை நடைபெறுவதாக கெங்கவல்லி போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்தது. இதையடுத்து கெங்கவல்லி போலீசார் நேற்று அப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர் அப்போது பையில் மது பாட்டில்களை வைத்து விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் மூடப்பட்டிருந்த பாரில் இருந்தும் சரக்கு பாட்டில்களை விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. விசாரணை நடத்தியதில் அந்த பெண் ஒதியத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயசித்ரா என்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.