சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி அடுத்துள்ள மண்மலை காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால் 71, இவர் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் ஆவார்.
இவரது மகன் ராம்குமார் மயிலாடுதுறையில் வட்டார போக்குவரத்து அலுவலராக இருந்து வருகிறார்.
கடந்த மார்ச் 29 ம் தேதி இரவு இவர்களது வீட்டுக்குள் 6 பேர் கொண்ட முகமூடி அணிந்த கொள்ளையர்கள் வீட்டில் புகுந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த காரை ஓட்டி வந்த டிரைவர் திருப்பூரைச் சேர்ந்த ஆனந்த் குமார் (30) மற்றும் சுபாஷ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதன் பின்னர் ஒரு பெண் உள்பட நான்குபேர் கைது செய்திருந்தனர், அதேபோல் திருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் உள்பட மொத்தம் 7 பேரை இதுவரை கைது செய்திருந்த நிலையில், மேலும் நேற்று தொடர் விசாரணையில் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் ஷாருக்கான் கனகராஜ் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், ஆர் டி ஒ வீட்டில் கொள்ளை சம்பவத்தில் இதுவரை மொத்தம் 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.