சேலம், ஈரோடு, கரூர், திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடும் வகையில் ஞாயிற்றுக்கிழமை முதல் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு வினாடிக்கு 5000 கன அடி வீதம் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.