இரண்டு கப் பச்சரிசி, ஒன்றரை கப் இட்லி அரிசி சேர்த்து ஊற வைக்க வேண்டும். ஒரு கப் உளுந்து, ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து தனியாக ஊற வைக்கவும். இன்னொரு கிண்ணத்தில் அரை கப் ஜவ்வரிசி மற்றும் அவல் சேர்த்து ஊற வைக்கவும். இவை அனைத்தையும் 5 மணி நேரம் ஊற வைத்து, தனித்தனியாக அரைத்து எடுத்து, நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை 8 மணி நேரம் புளிக்க வைத்து இட்லி செய்தால் மல்லிகை பூ போன்ற இட்லி கிடைக்கும்.