ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். நாளை மறுநாள் (டிச. 11) முதல் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சஞ்சய் ஆளுநர் பணியை தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வருவாய் துறை செயலாளராக இருந்த அவர் தற்போது இந்த பதவிக்கு வந்துள்ளார். தற்போதைய ரிசர்வ வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் (டிசம்பர்) முடிவடைகிறது.