ஆத்தூர் பைத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் கலைச்செல்வி. இவர் திமுகவைச் சேர்ந்தவர். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நடந்த முறைகேடு புகார் தொடர்பாக, இவர் மீது ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், நேற்று விசாரணை நடத்திய சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி அவரை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.