காவிரி ஆற்றில் வெள்ளம்: விசைப்படகு தற்காலிகமாக நிறுத்தம்!

68பார்த்தது
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஈரோடு, சேலம் மாவட்டங்களை இணைக்கும் வகையில் நடைபெற்ற விசைப்படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் கடும் அவதி அடைந்தனர். வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் தீயணைப்புத் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி