சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட 7வது வார்டு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான திடக்கழிவு மேலாண்மை திட்டம் மைய கட்டிட உள்ளது. கட்டிடத்தில் முன்புற இரும்பு கேட் பகுதியில் மான் ஒன்று அடிபட்டு சிக்கிக் கொண்டிருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு நேற்று தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்திற்கு வந்த வனத்துறையினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து கேட்டின் கம்பி இடுக்குப்பகுதியில் இறந்த நிலையில் சிக்கிக் கொண்டிருந்த இரண்டு வயதுடைய ஆண் புள்ளி மானை மீட்டனர். தொடர்ந்து வனத்துறையிடம் தீயணைப்புத் துறையினர் ஒப்படைத்த நிலையில் வனத்துறையினர் மானின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக எடுத்துச் சென்றனர்.