ஆத்தூர் முருகன் கோவிலில் உயர்மட்ட நடைபாதை பணி

53பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஏத்தாப்பூரில் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகில் முத்துமலை முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உலகிலேயே மிக உயரமான (146 அடி)முருகன் சிலை உள்ளது. கோவிலுக்கு சேலம் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகாமையில் உள்ள இக்கோவிலுக்கு பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து கோவிலுக்கு செல்வதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு விபத்துக்களும் நடைபெறுவதாக பக்தர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. இதை எடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் பக்தர்கள் சாலையை கடக்கும் வசதியாக இரும்பு கம்பிகளால் ஆன உயர்மட்ட நடைபாதை மேம்பாலம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. உயர்மட்ட நடைபாதை மேம்பாலம் அமைக்கும் பணி முழுமை பெற்ற பிறகு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலையை கடக்க பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வரும் நிலையில் உயர்மட்ட நடைபாதை மேம்பாலம் அமைப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி