ஆத்தூர் அருகே காணாமல் போன நபர் தண்ணீர் இல்லாத கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கீரிப்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர் முருகேசன். இவர் மூன்று நாட்களுக்கு முன் காணாமல் போய் உள்ளார். இந்நிலையில் கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான தண்ணீர் இல்லாத விவசாய கிணற்றில் முருகேசன் உடல் கிடந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மல்லியகரை போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் தீயணைப்பு துறையினர் உதவியுடன் முருகேசனின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.