மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைப்பது குறித்து பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் இருந்து நாளை (டிச.28) காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில், நினைவிடம் அமைக்கும் இடத்தில் இறுதி சடங்குகள் நடத்த அனுமதி கோரி மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். டெல்லியில் உள்ள ராஜ்காட் வளாகத்தில் இறுதிச்சடங்கு நடைபெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.