நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக். 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள என்கவுன்ட்டர் தொடர்பான வசனங்களை நீக்க வேண்டும் எனவும், அதுவரை படத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான விசாரணை இன்று (அக். 3) நடைபெற்ற போது மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.