லண்டனில் இசை நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்னை திரும்பிய இளையராஜா விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ரசிகர்கள் என்னை இசைக் கடவுள் என்று அழைக்கின்றனர். ஆனால் நான் ஒரு சாதாரண மனிதன் தான். பண்ணைபுரத்தில் இருந்து வெறுங்கால்களில் நடந்து வந்த நான், இன்று வரை எனது கால்களில் தான் நிற்கிறேன். எனக்கு 81 வயது ஆகிவிட்டது என்று யாரும் நினைக்காதீர்கள். இனிமேதான் ஆரம்பிக்க போகிறேன்” என்று கூறினார்.