நடிகர் தனுஷ் 'ராயன்' என்ற படத்தை தற்போது இயக்கி நடித்து வருகிறார். இப்படத்தின் கதை செல்வராகவனுடையது என்று இணையத்தில் கருத்து உலவி வந்தது. அதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள இயக்குனர் செல்வராகவன், 'தனுஷின் 50வது படமான 'ராயன்' கதையை நான் எழுதி இருக்கிறேன் என தவறான தகவல் பரவுவதை அறிந்தேன். அந்தப் படத்தின் கதையில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அது தனுஷின் கனவு படைப்பு. நான் அந்தப் படத்தில் வெறும் நடிகன் மட்டுமே' என்று தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.