புதுச்சேரி பாரதிதாசன் அரசு பெண்கள் கல்லூரியில் இன்று நடைபெற்றுவரும் இளநிலை பொறியாளர் எழுத்துத் தேர்வுக்கு 15 நிமிடம் தாமதமாக வந்த இளைஞருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அந்த மாணவர் கல்லூரி நுழைவாயிலில் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் தாள் தேர்வைக் காலை எழுதிவிட்டு, மதியம் நடைபெற இருந்த இரண்டாம் தாள் தேர்வுக்கு முன் சாப்பிடச் சென்று திரும்பும்போது தாமதம் ஆனதாக வேதனை தெரிவித்துள்ளார்.