ராமநாதபுரம் மாவட்டம் 'சுந்தரமுடையான்' கிராமம் டி. என். குடியிருப்பில் உள்ள கிராம மக்கள் பல ஆண்டுகளாக சுடுகாடு இல்லை எனக் கூறியும், புதிதாக சுடுகாடு அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி ராமநாதபுரம் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
அப்போது அவர்கள் தெரிவிக்கையில், 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்ற நிலையில், பல ஆண்டுகளாக சுடுகாடு எங்களுக்கு இல்லை. எங்கள் வீடுகளில் மரணிக்கும் உறவுகளின் உடல்களை உறவினர்களின் இடத்தில் அடக்கம் செய்து வருகின்றோம். சில நேரங்களில் மறுத்துவிட்டால் தேசிய நெடுஞ்சாலையின் சாலை ஓரங்களில் உடல்களை அடக்கம் செய்யும் அவல நிலை ஏற்பட்டு அந்த இடங்களில் தான் அடக்கம் செய்து வருகின்றோம்.
இது தொடர்பாக 10 ஆண்டுகளாக போராடியும் இதுவரையும் எங்களுக்கு சுடுகாடு கிடைக்கவில்லை. ஏராளமான அரசு புறம்போக்கு நிலங்கள் இருக்கின்றன. அதில் ஒரு இடத்தில் எங்களுக்கு சுடுகாடு அமைத்து தருமாறு பலமுறை முறையிட்டு வந்தோம் கிடைக்கவில்லை. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென தற்பொழுது ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோனிடம் மனு கொடுத்து இருக்கிறோம்.
அவரும் பரிசீலனை செய்வதாக தெரிவித்திருக்கிறார் எனக்கூறினர்.