பரமக்குடி ரயில்வே ஸ்டேஷன் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

73பார்த்தது
பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் ஆர்ச், காம்பவுண்ட் சுவர், சிமென்ட் தளங்கள், பயணிகளுக்கான லிப்ட் மற்றும் ஓய்வறை வசதி, கார், டூவீலர்கள் நிறுத்துமிடம், கூரைகள், எல். இ. டி. , டிஸ்ப்ளே மற்றும் கடைகள் கட்டுமானம் என பல கோடி மதிப்பில் நடக்கிறது.

தொடர்ந்து பரமக்குடி ரயில்வே ஸ்டேஷன் மதுரை, ராமேஸ்வரம் மார்க்கத்தில் ஆண்டுக்கு 10 லட்சம் பயணிகள் மூலம் ரூ. 9 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறது. தொடர்ந்து பட்டு, பருத்தி கைத்தறி நெசவுத் தொழில் செய்யும் நெசவாளர்கள், குண்டு மிளகாய், பருத்தி உற்பத்தி செய்யும் விவசாயிகள், வியாபாரிகள், வணிகர்கள், பொது மக்கள் இந்த ஸ்டேஷனை பயன் படுத்துகின்றனர். மேலும் பரமக்குடி மற்றும் அருகில் உள்ள சிவகங்கை மாவட்டம் உட்பட 30 கி. மீ. , க்கும் மேல் உள்ள மக்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் திட்டப்பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும் நிலை உள்ளது. ஆகவே கூரை பணிகள் உட்பட அனைத்து வகையான திட்டங்களையும் விரைந்த செயல்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி