பரமக்குடி ஸ்ரீ முத்தாலம்மன் கோயிலில் அமைச்சர் ராஜகண்ணப்பன் சாமி தரிசனம் செய்தார்:பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பால்வளத்துறை மற்றும் கதர் கிராம வாரிய தொழில்கள் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சாமி தரிசனம் செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் பிப்ரவரி 10ஆம் தேதி கும்பாபிஷேக பெருவிழா நடைபெற உள்ளது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பால்வளத்துறை மற்றும் கதர் கிராம வாரிய தொழில்கள் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று (பிப்ரவரி 09) கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.கோயில் நிர்வாகத்தின் சார்பில் அமைச்சருக்கு மரியாதை செய்யப்பட்டது.