பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உருவ பொம்மை எரிப்பு.!

84பார்த்தது
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து மாவட்ட செயலாளர் முனியசாமி அறிவுறுத்தலின் பெயரில் பரமக்குடி பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அண்ணாமலையின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் முத்தையா, சதன் பிரபாகரன், மாவட்ட துணைச் செயலாளர் பாதுஷா, பரமக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஐ கே சுப்பிரமணியன், நகர் கழக செயலாளர் ஜமால், நகர் அம்மா பேரவை செயலாளர் வடமலையான், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் நகர்மன்ற உறுப்பினர்கள், மகளிர்அணி நிர்வாகிகள், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி