நடிகர் கருணாஸின் பிரச்சாரத்தில் சலசலப்பு.!

62பார்த்தது
இந்தியா கூட்டணி வேட்பாளர் நவாஸ் கடையை ஆதரித்து பிரச்சாரம் செய்த கருணாஸ் மச்சாதனத்தின் போது பொதுமக்கள் கேள்வி கேட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணி கட்சி சார்பில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ்கனி ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறார்.

அவரை ஆதரித்து இன்று முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், திரைப்பட நடிகருமான கருணாஸ் நைனார் கோவிலில் தேர்தல் பரப்புரையை தொடங்கினார். முன்னதாக நைனார் கோவிலில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து பிறகு பிரச்சாரத்தை துவக்கினார். அதன் பின்பு அக்கிரமேசி கிராமத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனிக்கு ஆதரவாக கருணாஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

நீண்ட நேரம் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து விமர்சனம் செய்து பேசிக் கொண்டிருந்தபோது கிராமத்தில் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதனால் பிரச்சாரத்தின் இடையிலே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அதன் பின்பு காவலர்கள் பிரச்சனை செய்த நபரிடம் சமாதானம் படுத்திவிட்டு கிளம்பிவிட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி