நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் அவர் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசிய
ரஜினிகாந்த், கோச்சடையான் படத்தில் நடித்தபோது சௌந்தர்யா ஆக்ஷன், கட் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை, அதனால்தான் கே.எஸ். ரவிக்குமாரை பக்கத்தில் வைத்துக்கொண்டேன் என கூறினார். மேலும்
தனுஷ் கூட எனக்காக இரண்டு கதைகளை வைத்திருந்தார் ஆனால் நான் மறுத்துவிட்டேன் அதை அவர் புரிந்துகொண்டார் என கூறியுள்ளார். இதற்கு காரணம் பெரிய பெரிய இயக்குனர்கள் எனக்கு ஆக்ஷன், கட் சொல்லி நான் நடித்து தற்போது தனது மகள்கள் அவ்வாறு சொல்வதில் உடன்பாடு இல்லை என கூறியுள்ளார்.