தள்ளு தள்ளு தள்ளு.. ரயிலை தள்ளிய மக்கள் (வீடியோ)

80பார்த்தது
உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் ரயில்வே கிராஸிங்கில் பழுதடைந்து நின்ற ரயில் இன்ஜினை பொதுமக்கள் அனைவரும் இணைந்து தள்ளி சென்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த வீடியோ ஒன்றை காங்கிரஸ் கட்சி தனது X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது. மேலும் அதில், புல்லட் ரயில் கொண்டுவரப்போவதாக மோடி அரசு வாக்குறுதி கொடுத்துள்ளது. ஆனால் இங்கு மக்கள் ரயிலை தள்ளிக்கொண்டு போகும் நிலைதான் உள்ளது. அணைத்து துறைகளையும் மோடி அரசு அழித்துவருகிறது என தெரிவித்துள்ளது.