எல்லாம் ஓகே.. இந்த இபிஎஸ் தான்.. டிடிவி நெருடல்

580பார்த்தது
எல்லாம் ஓகே.. இந்த இபிஎஸ் தான்.. டிடிவி நெருடல்
தேர்தலில் ஓபிஎஸ்- இபிஎஸ் நிலை குறித்து டிடிவி தினகரன் பேசியுள்ளார். அவர் கூறுகையில் நீதிமன்றத்தில் வழக்குகள் இருப்பதால் ஓபிஎஸ் இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை உள்ளது. அவரது விருப்பப்படியே ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார். என்னை பொறுத்தவரை பாஜக நிர்ப்பந்திக்கவில்லை. தொகுதிகள் ஒதுக்கிய பிறகு எங்கள் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்வேன் என்று தெரிவித்த அவர் எடப்பாடி பழனிச்சாமி திருந்தினால் மட்டுமே அதிமுகவை பலப்படுத்த முடியும் என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி