2 பள்ளிகளுக்கு ஜூன் 17ஆம் தேதி வரை விடுமுறை!

57பார்த்தது
2 பள்ளிகளுக்கு ஜூன் 17ஆம்  தேதி வரை விடுமுறை!
விஷவாயு தாக்குதல் எதிரொலியாக புதுச்சேரியில் 2 பள்ளிகளுக்கு ஜூன் 17-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் விஷவாயு தாக்கி 15 வயது சிறுமி உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் இயங்கும் 2 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அரசு தொடக்கப்பள்ளி மற்றும் தனியார் இமாகுலேட் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி