ரோமியோ ஆட்டம் போட்டால்.. மீண்டும் இணைந்த புயல்கள்

63பார்த்தது
ரோமியோ ஆட்டம் போட்டால்.. மீண்டும் இணைந்த புயல்கள்
நடன இயக்குனர் மற்றும் நடிகர் பிரபுதேவா, அறிமுக இயக்குனர் மனோஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். ‘காதலன்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘லவ் பேட்ஸ்’ என 90-களில் ஏ.ஆர். ரகுமான், பிரபுதேவா கூட்டணியில் வெளியான படங்களும், பாடல்களுக்கும் மெகா ஹிட் ஆகின. 1997-ல் வெளியான ‘மின்சார கனவு’ படத்தில் இருவரும் இணைந்து கடைசியாக பணியாற்றியிருந்தனர். தற்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில் யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், ரெடின் கிங்க்ஸி, மலையாள நடிகர்களான அஜ்ஜு வர்கீஸ் மற்றும் அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி