வடபழனி கோவில் முன்னாள் அறங்காவலர் மறைவு: முதல்வர் இரங்கல்

59பார்த்தது
வடபழனி கோவில் முன்னாள் அறங்காவலர் மறைவு: முதல்வர் இரங்கல்
சென்னை வடபழனி ஆண்டவர் திருக்கோவிலின் முன்னாள் அறங்காவலரும், ஊழியருமான செல்வம் மறைவை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்த இரங்கல் செய்தியில், முன்னாள் அறங்காவலர் செல்வம் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். நீண்ட காலம் கோவில் திருப்பணிகளில் ஈடுபட்டு பக்தர்கள் மத்தியில் நற்பெயரைப் பெற்ற அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பணியாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி