''நீ சிங்கம் தான்'.. தோனிக்காக களமிறங்கும் ஏர். ரகுமான்

1068பார்த்தது
இன்று (மார்ச்.22) மாலை8 மணிக்கு இந்த வருடத்தின் முதல் ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது. போட்டிக்கு முன்னதாக மாலை 6.30 மணியளவில் தொடக்க விழா நடைபெறும். இதில் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொள்ளவிருக்கிறார். அதில் சிஎஸ்கே முன்னாள் கேப்டன் தோனிக்காக 'நீ சிங்கம்தான்' பாடலை பாடவுள்ளதாகக் அவர் கூறியுள்ளார். சிம்பு நடிப்பில் வெளியான 'பத்து தல' படத்தில் இடம்பெற்ற நீ சிங்கம்தான் பாடல் மிகவும் புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிகளையும் கிரிக்கெட் போட்டிகளையும் நேரலையாக ஜியோ சினிமாவில் பார்க்கலாம்.

தொடர்புடைய செய்தி