கறுப்பு பட்டை அணிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்!

71பார்த்தது
கறுப்பு பட்டை அணிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்!
இலுப்பூர் அன்னவாசல் உள்பட புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கறுப்பு பட்டை அணிந்து வியாபாரம் செய்த மெடிக்கல் கடைக்காரர்கள். சென்னை வண்டலூரை அடுத்த மணிவக்கத்தை சேர்ந்த வினோத்குமார் மெடிக்கல் கடை உரிமையாளரான இவர் வழக்கம்போல் கடையை மூடிவிட்டு வீடு திரும்பும் போது அவரை பின்தொடர்ந்து வந்த நான்கு பேர் அவரை சுற்றி வளர்த்து சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அன்னவாசல், இலுப்பூர், அறந்தாங்கி, ஆலங்குடி, திருமயம், கே புதுப்பட்டி உள்ளிட்ட புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மெடிக்கல் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் என அனைவரும் கருப்பு பட்டை அணிந்து வியாபாரம் செய்தனர்.

டேக்ஸ் :