விபத்திலிருந்து தற்காத்துக் கொள்ள ஒத்திகை நடவடிக்கை!

55பார்த்தது
விபத்திலிருந்து தற்காத்துக் கொள்ள ஒத்திகை நடவடிக்கை!
விராலிமலை திடீர் என்று அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் அதிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்று ஒத்திகை நிகழ்வு விராலிமலை உதிரிபாகம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் நடைபெற்றது. தீயணைப்பு துறையினருடன் தொழில்துறை பாதுகாப்பு அலுவலகம் இணைந்து இந்த ஒத்திகை நிகழ்வை நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகும் இங்கு ஐடிசி, ஹரிஹர் அலாய்ஸ், எஸ்ஆர்எப், சன்மார், சென்வியான், ரானே இன்ஜின் வால்ஸ், ரானே டிஆர்டபிள்யூ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கார்ப்ரேட் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இந்த தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கானோர் நிரந்தர தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்களாகவும்
பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் இது போன்ற தொழிற்சாலைகளில் பணியின் போது ஏதேனும் விபத்து நிகழ்ந்தால் அதிலிருந்து தாங்களையும் சக தொழிலாளர்களையும் எவ்வாறு காத்துக் கொள்வது என்பது குறித்த ஒத்திகை நிகழ்வு தொழிற்சாலை வளாக்த்தில் நடைபெற்றது.
நிகழ்வுக்கு தொழிற்சாலை பாதுகாப்பு மண்டல இணை இயக்குனர் மாலதி தலைமைEW வகித்தார். இதில் இலுப்பூ தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன்தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு அலுவலர்கள் இணைந்து அங்குள்ள வாயு உருளையில் கசிவு ஏற்பட்டால் அப்போது செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒத்திகை மூலம் தொழிலாளர்கள் முன்னிலையில் தத்ரூபமாக செய்து காட்டினர்.

தொடர்புடைய செய்தி