விரதம் இருப்பது ஆன்மீகத்தை கடந்து அறிவியல் ரீதியாக நல்லது என்றாலும், விரதம் எல்லோரும் இருக்கக் கூடாது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் மற்றும் நாள்பட்ட சிறுநீரகக் கோளாறுகள் உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் விரதங்கள் இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. மேலும், குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், வேறு ஏதேனும் உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு தொடர்ந்து மருந்து சாப்பிடுகிறவர்கள் விரதங்கள் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.