ஃபார்முலா 4 கார் ரேஸ்-க்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எதற்காக இந்த கார் ரேஸ் நடத்தப்படுகிறது. சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சரியில்லை. இது குறித்து கவலைப்படாமல் முதலமைச்சர் அமெரிக்கா சென்று விட்டார். உலக அளவில் நடக்கும் இந்த கார் பந்தயத்தில் ஒரு தமிழர் கூட இல்லை. பிறகு எதற்கு இந்த பந்தயம் நடத்தப்படுகிறது.? என கேள்வி எழுப்பினார்.