மது குடித்த அடுத்த நாள் காலையில் ஹேங் ஓவர் ஏற்படும். ஒயின் குடித்தால் ஹேங் ஓவர் போன்ற பாதிப்புகள் வராது என்று ஒரு கட்டுக்கதை மதுக்குடிப்பவர்கள் மத்தியில் பல காலமாக உலா வந்து கொண்டிருக்கிறது. ஆனால், சிவப்பு ஒயினில் டானின்கள் இருப்பதால் அவை தலைவலியை தூண்டக்கூடும். இதன் ஒவ்வாமைகளை எதிர்கொள்பவர்கள் இந்த அறிகுறிகளை அனுபவிப்பார்கள். அதே நேரத்தில் விஸ்கி போன்ற மதுபானங்களும் ஹேங் ஓவரை ஏற்படுத்தும் என்பதுதான் நிதர்சன உண்மை.