ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: விராட் கோலி முன்னேற்றம்

83பார்த்தது
ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: விராட் கோலி முன்னேற்றம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனான ஜோ ரூட் 881 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் 859 புள்ளிகள் பெற்று நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 2-வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் ரோகித் சர்மா 6-வது இடத்திலும், ஜெய்ஸ்வால் ஒரு இடம் முன்னேறி 7-வது இடத்திலும், விராட் கோலி 2 இடங்கள் முன்னேறி 8-வது இடத்திலும் உள்ளனர். சுப்மன் கில் 18-வது இடத்தை பிடித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி