கடந்த 2.5 ஆண்டுகளில், உலகளவில் 5.5 லட்சத்துக்கும் அதிகமான IT துறையினர் தங்கள் வேலையை இழந்துள்ளதாக Layoffs.fyi என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. 2024-ன் முதல் 8 மாதங்களில் மட்டும் 1,32,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதிநவீன AI தொழில்நுட்பத்தின் வருகை மற்றும் பயன்பாடு, கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் பணி நியமனத்தில் தொய்வு, சர்வதேச பொருளாதார மந்தநிலை ஆகியவை இதற்கு காரணம் என வல்லுநர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.