புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள மலைக்குடிபட்டி சீதாப்பட்டியைச் சேர்ந்த பழனிவேல் (68) என்பவர் சீதாப்பட்டியில் உள்ள பெட்டிக் கடையில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில் அந்த வழியே சோதனையில் ஈடுபட்டிருந்த இலுப்பூர் காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து பழனிவேலை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து 26 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.