புதுக்கோட்டை மாவட்டம் வயலோகத்தில் இன்று பேட்டி அளித்த தமிழக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் டெங்கு வேகமாக பரவி வருவதாக கூறினார். இதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வயதானவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், கொல்கத்தா மாணவி கொலை வழக்கில் குற்றவாளிக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.