மாத்தூர் அண்ணாமலை நகரைச் சேர்ந்த தினேஷ்குமார் (29) என்பவர் பைக்கில் மாத்தூர் கடைவீதியில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது மாத்தூர் உணவகம் அருகே அவருக்கு பின்னால் காரில் வந்த அப்துல்லா (39) என்பவர் மோதியதில் தினேஷ்குமாருக்கு கால்களில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து அவரது மனைவி சூர்யா (22) அளித்த புகாரில் மாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.