திருமயம்: அரிமளம் அருகே இளம்பெண் மாயம்!

78பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள குருத்தான்பட்டியை சேர்ந்தவர் சிவசங்கரி (22). இவருக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. கணவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் நிலையில், கடந்த 23ஆம் தேதி மாலை வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாக கூறியவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மாமியார் அடக்கம்மை அளித்த புகாரின் பேரில் அரிமளம் போலீசார் மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி