தூய்மை பாரத இயக்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சிக்குட்பட்ட கோட்டை பகுதியில் மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் உறுதிமொழி வாசிக்கப்பட்டு பின்னர் ஆட்சியர் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்களை வழங்கினார். முன்னாள் எம்எல்ஏ ராம் சுப்புராம், தாசில்தார் புவியரசன், ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.