புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அருகே உள்ள கண்டெடுத்தான்பட்டியைச் சேர்ந்த துரைச்சாமி (53) என்பவர் நெடுஞ்சாலைத்துறையில் சாலை பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். நேற்று வேலைக்கு சென்றபோது திடீரென மயக்கம் ஏற்பட்டு சாலையோரம் படுத்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது துரைச்சாமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.