புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, மணமேல்குடி வட்டங்களில் உள்ள பல ஊர்களில் நேற்று (ஆக.,31) மாலை முதல் பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டுனர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். மழையின் காரணமாக காவிரி பாசனப் பகுதி, மானாவாரி பகுதி வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.