விஷவண்டு கடித்து மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

73பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு கிராமத்தில் வடக்குப்பட்டி பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் இன்று பள்ளிக்குச் செல்வதற்காக நடந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் திடீரென கதண்டு கடித்து பள்ளி மாணவ மாணவிகள் உட்பட 8 பேர் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி