நடந்து சென்ற நபரிடம் செல்போன் பறிப்பு!

69பார்த்தது
நடந்து சென்ற இளைஞரிடம் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மூன்று நபர்கள் பட்டப் பகலில் செல்போனை பிடுங்கி செல்லும் சிசிடிவி காட்சி இணையதளத்தில் வைரல்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள தென்னம்பாடியைச் சேர்ந்த மருது என்பவரின் மகன் மதன்குமார் வயது 18 இவர் அரசு ஐடிஐ கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர் வழக்கம் போல வீட்டிற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் வாங்குவதற்கு கடைவீதியில் நடந்து வந்து கொண்டிருக்கும்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் செல்போனை பிடுங்கி சென்றார்கள்
இதுகுறித்து விராலிமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
நேற்றைய தினம் இலுப்பூரில் காவல் நிலையம் அருகிலேயே உணவகத்தில் சென்று திருடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

விராலிமலை மற்றும் இலுப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர்ரோந்து பணியை அதிக அளவில் ஈடுபடுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது

தொடர்புடைய செய்தி