தமிழக அரசின் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டும் பயனாளிகள் மரக்கன்று நட்டு வளர்ப்பது வரும் நிதியாண்டில் இருந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வீடு கட்டும் பணி துவங்கும் போதே சரியான இடத்தை தேர்வு செய்து, குறைந்தபட்சம் இரண்டு மரக்கன்றுகளாவது நட்டு வளர்க்க வேண்டுமென, ஊரக வளர்ச்சித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. வீடு பணி முடியும் போது, 6 அடி உயரம் வளர்ந்தால் தான் கடைசி கட்ட மானியம் விடுவிக்கப்படும்.