புதுச்சேரி - Puducherry

புதுச்சேரி: மறைந்த எம்.எல்.ஏ.விற்கு நினைவஞ்சலி செலுத்திய திருமா

புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் தொகுதியின் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நீல.கங்காதரன் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை குறைவால் காலமானார். இவரது மறைவையொட்டி புதுச்சேரி காங்கிரஸார் சார்பில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்று புதுச்சேரி அரசை கேட்டுக் கொண்டது. தொடர்ந்து அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதனையடுத்து அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக விடுதலைகள் சிறுத்தை கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் நீல. கங்காதரனின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கோர்க்காடு கிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதை தொடர்ந்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வில் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கந்தசாமி, விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில முதன்மை செயலாளர் தேவ. பொழிலன் , காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் கோர்க்காடு கிராம மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் நினைவஞ்சலி நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கோர்க்காடு கிராம காங்கிரஸ் பொறுப்பாளர் தேவேந்திரன் செய்திருந்தார்.

வீடியோஸ்


புதுச்சேரி